புதிய ரேஷன் கடை திறந்தும் பயனில்லை? வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விநியோகம் என மக்கள் வேதனை!

பெரம்பலூர்

செய்தியாளர் ; வசந்த்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரேஷன் கடையில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டதால் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் என கூறப்படுவதால் முதியவர்கள், பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ரேஷன் கடையை அனைத்து நாட்களிலும் அல்லது கூடுதல் நாட்களில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

<b> Total Views: 12 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *