துறையூரில் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

பேருந்து நிலையப் பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்… திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கருக்கு துறையூரில் உற்சாக வரவேற்பு அளித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், துறையூர் ரவுண்டானா முசிறி பிரிவு ரோடு பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலைய பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு துணை சபாநாயகர் ரவிசங்கர் மாலை அணிவித்தார், […]

Continue Reading

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் யோகநாதன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை !

  திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய நகர அதிமுக சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன் தலைமையில் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட செயலாளர் யோகநாதன் உப்பிலியாபுரம் துறையூர் பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று அண்ணா பேருந்து நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை […]

Continue Reading

புளியஞ்சோலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கோடை வெப்பத்தை தணிக்க குடும்பத்துடன் உற்சாக குளியல்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலைசுற்றுலாத் தலம், தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு களைகட்டத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு திரண்டு வருவதால், இப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது குடும்பங்களுடன் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான […]

Continue Reading

துறையூரில் தற்காலிக பேருந்து நிலையம் திறப்பு போதிய அறிவிப்பின்றி பயணிகள் அவதி

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று தற்காலிக பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதையொட்டி, பேருந்துகளின் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்துமிடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே முறையான அறிவிப்பு வழங்காததால் வெளியூரிலிருந்து வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். காலை நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு […]

Continue Reading

துறையூர் பகுதியில் காவல்துறை கொடி அணிவகுப்பு – பொதுமக்கள் அச்சமின்றி இருக்க வேண்டுகோள்

    திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இன்று மிகுந்த எச்சரிக்கையுடன் கொடி அணிவகுப்பை (Flag March) நடத்தினர். இந்த அணிவகுப்பு பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், சட்டம்-ஒழுங்கு நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் இருப்பதை வெளிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, தேர்தல் பின்னணியில் எந்தவித பதற்றமும் உருவாகாமல் தடுக்கும் நோக்கில் காவல்துறை முன்கூட்டியே தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அணிவகுப்பை முசிறி ரவுண்டானா பகுதியில் தொடங்கிய […]

Continue Reading

திருச்சி அருகே லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

திருச்சி, மே. 2- திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரைப் பிடித்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீரங்கம் தாலுகா, வயலூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த அக்பர் அலி (வயது 49) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 35 லாட்டரி எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் ரூ. 2,250 ரொக்கப் பணத்தை […]

Continue Reading

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி, மே. 2- திருச்சி ராம்ஜிநகர் போலீசார் ராம்ஜிநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (வயது 60) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், திருச்சி நவல்ப்பட்டு மற்றும் மணிகண்டம் பகுதிகளில் போலீசார் நடத்திய […]

Continue Reading

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி, மே. 2- திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட ஜோதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், மணி தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்து […]

Continue Reading

திருச்சி அருகே கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

திருச்சி, மே. 2- நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார். பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக பழனியப்பன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கிய பழனியப்பன், ரத்த வெள்ளத்தில் […]

Continue Reading

திருச்சி வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

  வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் . கூட்டத்திற்கு தலைமை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி ! திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் (04/05/26 )அன்று வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முக்கிய பங்கேற்பாளர்கள்: இக்கூட்டத்தில் […]

Continue Reading