முதல்வர் விஜய் பிறந்தநாளில் மனிதநேயம் மலர்ந்தது: ரத்ததான முகாமை தொடங்கி வைத்த துணை சபாநாயகர் ரவிசங்கர்

செய்தியாளர் : அருண் – 90959 25936 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சமூகநலத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், துறையூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது. இந்த முகாமை துணை சபாநாயகர் ரவிசங்கர் தொடங்கி வைத்து, ரத்ததானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மருத்துவ முகாமில் பங்கேற்ற 11 […]

Continue Reading

வாக்குறுதி கொடுத்த அரசு எங்கே? – துறையூரில் விவசாயிகள் கண்டனக் குரல்!

கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்; 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, சிறு மற்றும் குறு விவசாயிகளின் அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்யவும், பெரிய விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் […]

Continue Reading

முதல்வருடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு

  திருச்சி, ஜூன் 5 தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை துரை வைகோ எம்.பி. சந்தித்தார். இதுகுறித்து துரை வைகோ தெரிவித்திருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் நேற்று (04.06.2026) மாலை 5 மணிக்கு நேரில் சந்தித்து, எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் தேவைகள் தொடர்பான முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி விரிவாக கலந்துரையாடினேன். அன்போடு […]

Continue Reading

துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

துறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் (பத்திரப்பதிவு) அலுவலகத்தில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில்லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், பத்திரப்பதிவு பணிகளுக்காக நிலத் தரகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் அளவுக்கு அதிகமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்திருந்ததாக கூறப்படுகிறது. […]

Continue Reading

துறையூரில் தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

துறையூர், ஜூன் 3: தமிழ்நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பொதுமக்களுக்கான தீயணைப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி, வருகின்ற ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை “வாருங்கள் கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தீ விபத்துகள், சாலை […]

Continue Reading

திருச்சி அரசு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழப்பு: மருந்து தரக்குறைபாடே காரணமா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

  திருச்சி, ஜூன் 3: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு செலுத்தப்பட்ட டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) மருந்தின் தரக்குறைபாடு உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு செவிலியர் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த 20 வயதுடைய சீதாலட்சுமி, மூக்கடைப்பு பிரச்சினைக்காக கடந்த மே 22-ம் தேதி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை […]

Continue Reading

விலை அதிகம் : ஆக்ஷன் அதிகம்! துறையூரில் துணை சபாநாயகரின் அதிரடி ஆட்டம்

திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான மனமகிழ் மன்றத்தில், விதிமுறைகள் மீறி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கடைகள் திறக்கப்படாத நிலையில், துறையூர் பகுதியில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழக அரசு 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபான பாட்டில்கள் விற்பனை […]

Continue Reading

பள்ளி வாகனங்கள் ‘பிட்’டாக இருக்கிறதா? துறையூரில் சார்-ஆட்சியர் அதிரடி ஆய்வு!

திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன அலுவலகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை முசிறி சார்-ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் பாபு முன்னிலையில் நடத்தினர். ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டகம், தீயணைப்பு கருவி, அவசர வெளியேறும் கதவு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் முறையாக செயல்படுகிறதா என பரிசோதிக்கப்பட்டது. மேலும், […]

Continue Reading

டாஸ்மாக் பணியாளர்கள் மனஉளைச்சலுடன் பணியாற்றுகின்றனர் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருச்சி, மே 20:   திருச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் திருச்சி மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உடனடியாக […]

Continue Reading

நீங்களெல்லாம் ஒரு அதிகாரியாக துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையம் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் செயல்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் வெளியூர் செல்ல வந்த பெண் […]

Continue Reading