நாகப்பட்டினத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா: அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கோலப்போட்டி மற்றும் பேரணி

நாகப்பட்டினம்: தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு, நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. “நமது அங்கன்வாடி – நமது பொறுப்பு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதில் ஊட்டச்சத்து, குழந்தைகளின் ஆரோக்கியம், சமச்சீர் உணவு, தாய் மற்றும் குழந்தைகளின் நலன் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் […]

Continue Reading

CECRI, காரைக்குடியில் ஆல்மைட்டி பப்ளிக் பள்ளி மாணவர்களின் சாதனை

பெரம்பலூர், ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் சார்பில், செப்டம்பர் 26, சனிக்கிழமை அன்று, புகழ்பெற்ற மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI), காரைக்குடி நிறுவனத்திற்கு மிகவும் பயனுள்ள கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 6 ஆசிரியர்களுடன் மொத்தம் 83 மாணவர்கள் கலந்து கொண்டனர். CECRI-யில் நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர். இதில் ஆல்மைட்டி பள்ளி மாணவர்கள் சிறப்பாகச் சாதித்து பள்ளிக்குப் பெருமை […]

Continue Reading

விசிக முன்னாள் நிதிச் செயலாளர் பாண்டியரசனின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிதிச் செயலாளர் மறைந்த பாண்டியரசனின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், பெரம்பலூரில் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, பாண்டியரசனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.   இதில் மாநிலச் செயலாளர்கள் வீர செங்கோலன், வழக்கறிஞர் ஸ்டாலின், மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

எறையூர் காமராஜர் நகரில் ‘வேர்களைத் தேடி’ பயணம்

  செய்தியாளர் :வசந்த் சுமார் 100 குடும்பங்களுக்கு பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி தீர்மானம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் கனவுத் திட்டமான ‘வேர்களைத் தேடி (மக்களைத் தேடி)’ நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 36 எறையூர் காமராஜர் நகரில் பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநிலச் செயலாளர்கள் வீர செங்கோலன், மகளிர் விடுதலை இயக்கத்தின் […]

Continue Reading

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் இதய நோய்களுக்கென பிரத்யேக மருத்துவமனையாக அவேரா இதய மருத்துவமனை*

அதி நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் இதய நோய்களுக்கென ஒரு முழுமையான சிகிச்சை மையமாக துவங்கி உள்ளதாக மருத்துவர்கள் ராஜ்பால் அபைச்ந்த்,சந்திரசேகர் ஆகியோர் தகவல் கோவையில் இதய நோய்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அவேரா இதய மருத்துவமனை, அக்டோபர் 4,ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு அவேரா மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.. இதில் இதய நோய் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ராஜ்பால் மற்றும் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் பேசினர்.. இதயத்திற்காக, இதயத்திலிருந்து” […]

Continue Reading

பெரம்பலூர் அருகே செயல்படாத கல்குவாரியில் தலையில் காயத்துடன் இளைஞர் சடலமாக மீட்பு

    செய்தியாளர் : வசந்த்  பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் செயல்படாமல் உள்ள கல்குவாரியில் தலையில் காயத்துடன் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் வெற்றிவேல் (27), த/பெ. தமிழரசன் எனத் தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துபாயில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஒரு வாரமாக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 30) காலை […]

Continue Reading