அரியலூர் நகராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளர் லதா பாலு தீவிர ஓட்டு வேட்டை

அரியலூர்

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளில், திமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் லதா பாலு வீதி வீதியாக சென்று, திமுக அரசின் கடந்த ஐந்து ஆண்டுகால மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கி கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு அனைத்து வார்டுகளிலும் வார்டு திமுக செயலாளர்கள் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் சார்பில் உற்சாகமான & வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகர திமுக செயலாளர் இரா. முருகேசன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.மாரியம்மாள், பொதுக்குழு உறுப்பினர் இரா. பாலு, திமுக நிர்வாகிகள் ஜி. பாண்டியன், பனங்கூர் எஸ். ஜெயராமன், இரா. சுர்ஜித், பி.வி. அன்பழகன், அன்பு ராஜேஸ், சிஐடியூ மாவட்ட தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *