அரியலூரில் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிப்பு

அரியலூர்

அரியலூர் செட்டி ஏரிக்கரை பூங்காவில் அமைந்துள்ள உள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது 135 வது பிறந்த நாளை முன்னிட்டு,மதிமுக சார்பில் அரியலூர் சட்டமன்ற உறுப்பி னர் கு. சின்னப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட மதிமுக செயலாளர் க. இராமநாதன், நகர செயலாளர் இராம மனோகரன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் கா.பி .சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஒபி சங்கர் , நா. பிரேம் குமார், ஏ பி செந்தில், நா .சிவஞானம் ,உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் அரியலூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மதி(எ) மருத வாணன், சி. சுதாகர் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நகரச் செய லாளர் விஜி தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்பு
அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிற்றரசு, தலைமையில்
மாவட்ட கெளரவ தலைவர் இரவிசந்திரன்,மாவட்ட து.தலைவர்கள் கோவிந்தசாமி, தர்மலிங்கம்,மாவட்ட பொரு ளாளர் ஜெயராஜ்,மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணன், முருகேசன் ரஞ்சித் இராஜ கோபால், குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ஊர்வலமாகவந்து,செட்டியேரிக்கரையிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழ்நாடு எஸ் எஸ் டி அலுவலர் நலச் சங்க மாவட்ட தலைவர் எம் முனிய ,முத்து தலைமையில் அச்சங்க த்தின் மாவட்ட செயலாளர் பொ. சாமிதுரை, மாவட்ட பொருளாளர் வி ஆர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அக்காட்சியின் மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமையில் அக்கட்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் நீலமேகம், அரியலூர் நகர செயலாளர் ஸ்டாலின் உள்ளி ட்ட நிர்வாகிகள் பலர் அம்பேத் கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *