அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன் டீ தயாரிப்பில் ஈடுபட்டு தீவிர வாக்கு சேகரிப்பு.

அரியலூர்

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட மேலஅக்ரஹார பகுதியில், அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன், கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது, அப்பகுதியில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், பின்பு நேரடியாக டீ தயாரித்து வழங்கியும், அதிமுக தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரினார்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்பி ஆ. இளவரசன், முன்னாள் எம்எல்ஏ ப. இளவழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி. சங்கர், இணைச் செயலாளர் நா. பிரேம் குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஓ. வெங்கடாஜலபதி, நகர அதிமுக செயலாளர் ஏ.பி. செந்தில், பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீ நந்தினி விக்னேஸ்வரன், நகர பாமக செயலாளர் விஜி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் புரட்சி சிவா, நகர துணை செயலாளர் பழனியாண்டி, முன்னாள் கவுன்சிலர் கே. கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *