
பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளரான டாக்டர் எஸ்.டி. ஜெயலெட்சுமி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாரணமங்கலம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, கிராம பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்து, தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தனர். பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து பேசினார் ஜெயலெட்சுமி, தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கமளித்து ஆதரவு கோரினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், ஆர்.அருண், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், நகர்மன்ற உறுப்பினர் ஜெயசித்ராமணிவாசகம், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் கோபாலபுரம் செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தனசேகரன், ஒன்றிய பொருளாளர் புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி சந்திரமோகன், கிளைச் செயலாளர்கள் வைத்தியநாதன், வைத்தியலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அழகு முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
கேப்டன்

