
பெரம்பலூரில் தேவேந்திர குல வேளாளர் நலச்சங்க 5வது மாவட்ட மாநாடு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
மாநாட்டிற்கு நிறுவனர் ஜெயபாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ், பிரவீன், சங்கர் (எ) மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆலோசகர் ஜெயராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் தேவேந்திர குலவேளாளர் பட்டியல் வெளியேற்றம் வழங்கவேண்டும், தியாகி இம்மானுவேல் சேகரனார் மற்றும் சுந்தரலிங்கனார் சிலை செஞ்சேரி கிராமத்தில் அமைக்கவேண்டும், பெரம்பலூர் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு உள்ளாட்சி அமைப்பில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய பெருந்தலைவர் பதவி வழங்கவேண்டும். இளைஞர்களுக்கு கஞ்சா மது பழக்கத்திற்கு அடிமையாகமல் இருக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தவேண்டும், டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கவேண்டும். 2026ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், இளைஞர்களுக்கு கபாடி மற்றும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரியும், மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனம் அரசிடம் பரிந்துரைக்கவேண்டும், வரும் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பொறுப்பாளர் அறிவழகன் வரவேற்றார். முடிவில் பொறுப்பாளர் பிரசாத் நன்றி கூறினார்.
செய்தியாளர் கேப்டன்

