
செய்தியாளர் : ஜீவா
பெரம்பலூர்: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள B. R. Ambedkar அவர்களின் சிலைக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் கழக துணைப் பொதுச்செயலாளர் A. Raja எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கும் ஆ.இராசா எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

