
செய்தியாளர் சுபாஷ் செல்வம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) வேட்பாளர் திருமதி சரண்யாவுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், “நாம் இருளில் தூங்காமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம். விரைவில் விடியல் வரும், விடியல் வரும் என்று நம்மை நாமே நம்ப வைத்து கொண்டு இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையை மாற்ற மக்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குன்னம் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சரண்யாவுக்கு ஆதரவு அளிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்சாரத்தில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

