
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு ஆதரவாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
குன்னம் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில், அவர் பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை எளிமையாக விளக்கி, அவை மக்களின் நாளாந்த வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.
மேலும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், குன்னம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த பிரச்சார நிகழ்ச்சியில், பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாகமாகக் கைகொட்டி ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளின் ஆர்வமும், எழுச்சியும் கூட்டத்தில் தெளிவாகக் காணப்பட்டது.
குன்னம் தொகுதியில் நடைபெற்ற இந்த பரப்புரை, தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிகாரப்பூர்வ துவக்கமாக அமைந்துள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த பிரச்சாரத்தை தொடர்ந்து, தொகுதி முழுவதும் தீவிரமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஏற்பட்ட மக்களின் வரவேற்பும், ஆதரவும், குன்னம் தொகுதியில் திமுக வேட்பாளர் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெருவார் என்பதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் சுபாஷ் செல்வம்

