அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு தினம் அனுசரிப்பு.

அரியலூர்

 

செய்தியாளர் : பாலசுப்பிரமணியம்

 

அரியலூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவு தின, நினைவேந்தல் நிகழ்ச்சி ,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.செட்டியே ஏரி கரை பூங்காவிலுள்ள கர்மவீரர் காமராஜர் சிலைக்கு முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஜி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர், நகர காங்கிரஸ் பொறுப்பாளர் எஸ் எம் எஸ் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.அரியலூர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் டி சீனிவாசன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

தொடர்ந்து அங்கு நன்கு அலங்கரிக்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும்,மாநிலத் துணைத் தலைவர் ஜி இராஜேந்திரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் கலைச்செல்வன், சீமான் மூப்பனார், வட்டாரத் தலைவர்கள் பாண்டியராஜன், ஏபி சுரேஷ், ஓபிசி அணி மாவட்ட தலைவர் சங்கர் வேல், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் சண்முகவேல்,ஜெயங்கொண்டம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. ஜெயபிரகாஷ், முன்னாள் மணக்கால் ஊராட்சி மன்ற தலைவர் பழனிமுத்து, கட்சி நிர்வாகிகள்ஆண்டனி தாஸ்,ஜோதி பாசு,மணிகண்டன்,செல்வராஜ்,சரவணன், ஆறுமுகம், சாமிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம்எஸ் சந்திரசேகர் வாசிக்க கட்சி நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றனர்.

 

<b> Total Views: 22 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *