
அரியலூர் கோட்டாட்சியர் பிரேமி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கலந்துகொண்டு, பேசுகையில்
பொதுப்பணித்துறை வசமுள்ள கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரி 1580 ஏக்கரில் 416 ஏக்கரே உள்ளது 1200 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளதனை உடனடியாக அளவீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேல வண்ணம் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். குந்தபுரம் வண்ணான் குளம் ஏரியில் உள்ள மாட்டுச்சாண குப்பைகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள ஏரியை ஆழப்படுத்த வண்டல் மண் எடுக்க முன்னுரிமை கொடுத்து நீர்வளத்துறை அலுவலர்கள் உள்ளாட்சி பொதுப்பணித்துறை நீர்நிலை ஆர்வலர்கள் குழு அமைத்து கண்காணிக்க நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. சிறப்பு குழு மேற்பார்வையில் வண்டல் மண் எடுக்க குழு அமைப்பதன் மூலம் வண்டல் மண்ணை தவறாக பயன்படுத்தும் மணல் மாபியாக்களிடம் இருந்து தடுக்க இயலும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் தள்ளுபடி செய்து விட்டு புதிதாக சூன் மாதம் துவக்கத்தில் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வாரணவாசி மருதையாற்று பாலத்தில் உள்ள மண் குவியல்களை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வனவிலங்குகள் மனித மோதலைத் தவிர்க்க வனங்களில் சிறுதானியங்களான கம்பு சோளம் கேழ்வரகு பயறு வகைகளை விதைகளாக தூவ மான் மயில் குரங்குகள் காட்டுப்பன்றி வனங்களை விட்டு வெளியே வராது மேலும் வனங்களில் ஆலமரம் அரசமரம் புளியமரம் உள்ளிட்ட மண்ணுக்கேற்ற வன உயிரினங்களுக்கு தேவையான உணவு தரும் கனி காய் உள்ளிட்ட மரங்களை அதிகளவில் நட வேண்டும். யூக்கலிப்டஸ் போன்ற வனவிலங்குகளுக்கு பயன்தராத மரங்களை நடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அரியலூர் நகர முகப்பினி்ல் குப்பை கிடங்கு அருகே வனத்துறை குடியிருப்புகளை சுற்றி நிற்கும் கழிவு நீரை அகற்றி விட்டு வண்டல் மண்ணை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரியலூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குட்டையில் புல் புதர் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதனை அகற்றி தூய்மையான நீரை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என் எஸ் எஸ் கேம்ப்பை அதிகளவில் ஈடுபடுத்தி நீர்நிலைகளை சுற்றி உள்ள சிறிய அளவு உள்ள சீமை கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். நீர்நிலைகளை காக்க தனிப்படை அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுங்கள். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தூற்றும் நடைமுறையை கைவிட்டு அதற்கான கருக்காய் அளவு மதிப்பிட்டு எடையை குறைத்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கலாம். நெல் கொள்முதல் நடைமுறையில் காலத்திற்கு தகுந்தாற் போல மாற்றங்களை செய்ய வேண்டும் ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் அறுவடை சாத்தியமாகி உள்ளதால் அதற்கேற்றாற் போல எடை போடும் முறை மாற்றியமைத்து எடைமேடை மூலம் எடை போட நடைமுறை மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதன் முலம் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் தேங்குவது மழையால் நனைந்து வீணாவதனை தவிர்க்க இயலும்.
மகிளா நீதிமன்றத்தில் குடிக்க தண்ணீர் வசதி அமர இருக்கைகள் வசதி செய்து தர வேண்டும். பத்திரப்பதிவுத்துறையில் நிலவும் இலஞ்சத்தை தவிர்க்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நீர்ப்பிடிப்பு பகுதிகளாகவும் 33 சதவீத காடுகளாகவும் மாற்றித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
கரைவெட்டி ஏரிக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு மாற்று இடம் ஏரி வாரிகளில் வழங்கப்பட்டு விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதற்கு வகைபாடு மாற்றம் செய்ய வேண்டும் என 1958 ல் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது எனவே வகைபாடு மாற்றம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

