வேளாங்கண்ணி பேராலயத்தில் புதிய அருட்தந்தைகளுக்கு வரவேற்பு விழா

ஆன்மீகம்

 

செய்தியாளர்  ; விஜய்

வேளாங்கண்ணி, ஜூன் 3: புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புதிதாக பொறுப்பேற்ற அருட்தந்தைகளுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

வேளாங்கண்ணி பேராலய துணை அதிபராகவும், பங்குத்தந்தையாகவும் பணியாற்றிய அருட்தந்தை அற்புதராஜ், புனித சேவியர் ஆலயம் பங்குத்தந்தையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், பேராலயத்தில் பணியாற்றி வந்த அருட்தந்தையர்கள் அகஸ்டின் அம்புரோஸ், ஆரோக்கிய வினிட்டோ மற்றும் ஆண்டனி பெர்டினான்டோ ஆகியோரும் பணியிட மாறுதலின் அடிப்படையில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதையடுத்து, பங்குத்தந்தை மற்றும் துணை அதிபராக அருட்தந்தை அகஸ்டின், அருட்தந்தையர்கள் செபாஸ்டின், வில்சன்பால், ஆண்டனி அல்போன்ஸ் மற்றும் நிஷான் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 

இவர்களுக்கு பாராட்டு மற்றும் வரவேற்பு விழா பேராலய வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பொருளாளர் உலகநாதன் வரவேற்புரை வழங்கினார். பேராலய அதிபர் அருட்தந்தை இருதயராஜ், புதிய அருட்தந்தைகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்ந்து பஞ்சாயத்தார்கள், பேரூராட்சி தலைவர், அன்பிய உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் புதிய பொறுப்பேற்ற அருட்தந்தைகளுக்கு வாழ்த்துகளையும் வரவேற்புகளையும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் நிர்வாக தந்தை ஆரோக்கிய பரிசுத்தராஜ் நன்றி கூறினார்.

 

<b> Total Views: 13 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *