
செய்தியாளர் :விஜய்
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட அரசு சித்த மருத்துவத் துறை சார்பில் யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடை தூய மைக்கேல் அகாடமி பள்ளி மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட முதன்மை நிதி அலுவலர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட சித்த மருத்துவ யோகா மருத்துவர் பூங்குன்றன் யோகா பயிற்சிகளை வழங்கி, யோகா மூலம் ஆரோக்கியமான மனம், வலிமையான உடல் மற்றும் அமைதியான வாழ்க்கையை பெற முடியும் என விளக்கினார்.
இதுபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

