5.45 லட்சம் பணம், 13 பவுன் நகை கொள்ளை வழக்கில் மின்னல் வேகத்தில் நடவடிக்கை

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் நகர காவல் சரகத்திற்குட்பட்ட கடற்கரைச் சாலையில் வசித்து வரும் வில்சன் (60), தேவன் மகன், மரவாடி ரோடு, வேதநாயகன் செட்டி தெரு, நாகப்பட்டினம் என்பவரது வீட்டில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டனர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரைக்கால் திருநகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (35), தேவதாஸ் மகன், மாரியம்மன் கோவில் வீதி என்பவர் திருட்டில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் இன்று (23.06.2026) ஐயப்பனை கைது செய்து, அவரிடம் இருந்து திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த நாகப்பட்டினம் நகர காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

<b> Total Views: 7 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *