37 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – வாலிப நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்த நண்பர்கள்

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூரில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில், 1987 ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள், தங்களது வாலிபக் கால நண்பர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து நெகிழ்ச்சியுடன் மகிழ்ந்தனர். பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் சுமார் 150 முன்னாள் மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி வாழ்த்து பெற்றனர். மேலும் ஆசிரியர்களுடன் மற்றும் நண்பர்களுடன் நினைவுப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு பழைய பள்ளி நாட்களின் இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒன்றுகூடிய இந்த சந்திப்பு, அனைவருக்கும் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. வெளிநாடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள், பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், இந்த அரிய வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினர்

 

<b> Total Views: 232 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *