32 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர்

துறையூர்

செய்தியாளர் -அருண்: 9095925936

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த கொப்பம்பட்டியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பொதுமக்கள் வருவாய்த்துறை சார்ந்த சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அலுவலகம், அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் முக்கியமான திட்டமாக கருதப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசின் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக 32 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை துணை சபாநாயகர் ரவிசங்கர் வழங்கினார். பட்டா பெற்ற பயனாளிகள் தமிழக அரசுக்கும், வருவாய்த் துறைக்கும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் வருவாய்த் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் கொப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது வருவாய்த் துறை தொடர்பான பணிகளை இனி விரைவாகவும், சிரமமின்றியும் மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *