
திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன அலுவலகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், துறையூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை முசிறி சார்-ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் பாபு முன்னிலையில் நடத்தினர்.
ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டகம், தீயணைப்பு கருவி, அவசர வெளியேறும் கதவு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் முறையாக செயல்படுகிறதா என பரிசோதிக்கப்பட்டது.
மேலும், அவசர வெளியேறும் பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்த வாகனங்களில் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டுநர்களுக்கு சார்-ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து துறையூர் தீயணைப்பு துறையினர், பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். அதேபோல், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவசர கால முதலுதவி வழங்கும் முறைகள் குறித்து வாகன ஓட்டுநர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கினர்.
துறையூர் தாலுகாவில் உள்ள 19 பள்ளிகளில் இருந்து 85 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது நிகழ்ச்சிகள் மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம் மற்றும் துறையூர் காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரை நகர் உடனிருந்தனர்
<b> Total Views: 16 </b>

