நாகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி முக்குலத்துப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்!

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், அக். 10:

நாகப்பட்டினம் அவுரித்திடலில், ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி முக்குலத்துப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணன் தலைமை வகித்தார். தஞ்சை மண்டல செயலாளர் தேவர் முன்னிலை வகித்தார்.

கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடித்து விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும், சீர்மரபினர்களுக்கு டிஎன்டி, டிஎன்சி என இரட்டைச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி, டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த அரசாணையை முறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடார் மக்கள் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜா, வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் அண்ணா சரவணன், மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் மணி, திரைப்பட இயக்குநர் மோகன்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *