
துறையூர் | மார்ச் 15, 2026
திருச்சி மாவட்டம் துறையூரில், சமையல் எரிவாயு (சிலிண்டர்) தட்டுப்பாட்டைக் கண்டித்தும், அதனைச் சீர்செய்யத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனால் பொதுமக்கள் அன்றாட உணவு சமைக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும், விலையேற்றத்தைத் தடுக்கத் தவறியதாகவும் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கிப் போராடினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஸ்டாலின்குமார் தலைமை தாங்கினார்.
திருச்சி மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் -ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை, சரவணன் – நகர செயலாளர் மெடிக்கல் முரளி நகர்மன்றத் தலைவர் செல்வராணி முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ் ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மாகலிங்கம்ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். “பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை உடனடியாகப் போக்க வேண்டும்” என வலியுறுத்தி விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.


