
திருச்சி மாவட்டம் துறையூர் முசிறி பிரிவு சாலை ரவுண்டானா அருகே நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் துறையூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியான அஸ்வத்தாமன் என்பவரின் நெருங்கிய கூட்டாளியான விச்சு என்கிற லெனின் பிரசாத்துக்கு வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசினார்.
மேலும் எம்எல்ஏ ஆகினால் கொலை குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து துறையூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் போட்டியிடுவதாக பேசினார். கோடிக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு மற்ற இடங்களில் எப்படியோ துறையூர் தொகுதியில் திமுக காரர்களே காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம் என துறையூர் தொகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் கூறியதாக சாட்டை துரைமுருகன் பேசினார்.
எங்களுடைய வாக்கு இந்த தேர்தலில் உங்களுக்குத் தான் என துறையூர் திமுக ஒன்றிய செயலாளர் கூறியதாகவும் சாட்டை துரைமுருகன் அழுத்தம் திருத்தமாக பேசினார்.
மேலும் அனைத்துக் கட்சிகளிலும் தங்களுக்கு ஸ்லிப்பர் செல் உள்ளதாகவும் கூறினார். காங்கிரஸ் வேட்பாளர் கொலை குற்றவாளியின் கூட்டாளி என சாட்டை துரைமுருகன் பேசியது துறையூர் சட்டமன்ற தொகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

