பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி – வீ. ஜெகதீசன்

பெரம்பலூர்

செய்தியாளர் கேப்டன் வசந்த்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்காக இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்றிய தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோடான கோடி நன்றியை மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,
கழக இளைஞரணி செயலாளர் – துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆலோசனைக்கினங்க,கழக துணைப் பொதுச்செயலாளர் -மேனாள் ஒன்றிய அமைச்சர் – ஆ.இராசா.எம்.பி. வழிகாட்டுதல் படி,

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் டாக்டர் S.T.ஜெயலெட்சுமி,குன்னம் தொகுதியில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா‌சி.சிவசங்கர் ஆகிய இரண்டு வெற்றி வேட்பாளர்களுக்கும் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, இரவு, பகல் பாராமல் தேனீக்களை போல சுறு,சுறுப்பாக பணியாற்றிய பெரம்பலூர்,குன்னம் தொகுதியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்,முன்னாள் , இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், முன்னாள்,இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,வார்டு மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் ஒட்டு மொத்த நிர்வாகிகள், தொண்டர்கள், கழகத்தின் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் அல்லும் பகலும் அரும்பணியாற்றிய கழகத்தினர், கழகத்தின் உயிர் நாளமான அடிமட்ட தொண்டர்கள் மற்றும் இரண்டு தொகுதிகளிலும் வாக்களித்த வாக்காளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோடானு, கோடி
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்‌. இவ்வாறு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *