துறையூரில் சித்ரா பௌர்ணமி விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூரில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விநாயகர் தெருவில் அமைந்துள்ள செல்வ மாரியம்மன் திருக்கோவிலில் பத்தாம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு சிறுவர் முதல் பெரியவர் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துச் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஆத்தூர் சாலையில் உள்ள காவல் தாய் அம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம், “ஓம் சக்தி பராசக்தி” எனும் பக்தி கோஷங்களுடன் பாலக்கரை, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி வழியாக செல்வ மாரியம்மன் கோவில் சன்னதியை அடைந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை நாகராஜன், விஜி, மகாமுனி ஆகியோர் செய்திருந்தனர். கிராமத் தலைவர் பிச்சரத்தினம், மோகன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மேலும், அம்மன் வீதி உலாவிற்காக புதிய சப்பரம் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டிருந்தது. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *