அரியலூர் – நகரில் ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம் ஜமீன்தார் தொடங்கிவைத்தார்

அரியலூர்

 

செய்தியாளர் : கேப்டன் வசந்த்

 

அரியலூர் – நகரில் ஒப்பில்லாத அம்மன் தேரோட்டம் ஜமீன்தார் தொடங்கி வைக்க பொதுமக்கள் வடம் பிடிக்க வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர்.

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவில் தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ஒப்பில்லாதம்மனை தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் கோவில் ஜமீன்தார்களின் வம்சாவழி கோவிலாகவும், பல ஊர்களைச் சேர்ந்த பொது மக்களின் குலதெய்வ கோவிலாகவும் விளங்கி வருகிறது. கோவிலில் கடந்த 1942 ஆம் வருடத்திற்கு பிறகு தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த வருடம் அரியலூர் ஜமீன்தாராக பட்டமேற்றதுரைவிஜய ஒப்பில்லாத மழவராய நயினார், கோவில் குலதெய்வ மக்கள் மற்றும் பக்தர்களின் முயற்சியால், 83 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

இரண்டாம் ஆண்டாக திருத்தேர் பெருவிழா கடந்த 21ம் தேதி எல்லை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினந்தோறும் அண்ண வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒப்பில்லாத அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் ஒன்பதாம் நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.

கோவில் ஆதின பரம்பரை தர்மகர்த்தா கே ஆர் துரை திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இதன் பின்ன ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு மாட வீதிகளில் அசைந்தாடி சென்ற திருத்தேரில் வீட்டிலிருந்த அம்மனுக்கு ஒவ்வொரு வீட்டிலும் பொதுமக்கள் பழம், தேங்காய் உள்ளிட்ட பொருள்களை படைத்து வழங்கினர்.

தேர் திருவிழாவில் வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் பொதுமக்களால் மோர், பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது. அரியலூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அரியலூர் நகரில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு ஒப்பில்லாத மனை வழி வழிபட்டு சென்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *