
அரியலூரில் திராவிடர் கழகம் சார்பில் பட்டுக்கோட்டை அழகிரியின் 77 வது நினைவு நாள் பரப்புரை கூட்டம்.
அரியலூர் அண்ணா சிலை அருகே,திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி அஞ்சான் அஞ்சான் பட்டுக்கோட்டை அழகிரியின் 77வது நினைவு நாளை முன்னிட்டு, பரப்புரை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு அரியலூர் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் சி சிவக்கொழுந்து தலைமை தாங்கினார்.பரப்புரைக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.ஜி. மணிகண்டன்வரவேற்றார்.திராவிட கழக மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர்
ப.மதியழகன்,ஒன்றிய துணைத் தலைவர்
மு.மருதமுத்து,
அரியலூர் நகர செயலாளர் ஆட்டோ .தர்மா, ‘தமிழ் களம் புலவர் அரங்கநாதன், தமிழ் தேசிய முன்னணி அரியலூர் மாவட்ட செயலாளர் பெ.பாரிவள்ளல்,உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர்.பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக பேச்சாளர் புலவர் வை .நாத்திக நம்பி,கோவை . வீரமணி உள்ளிட்டோர்சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுயமரியாதை இயக்கத்தில் பட்டுக்கோட்டை அழகிரியின் சீரிய தொண்டினை நினைவுகூர்ந்து .
கூட்டத்தில் திராவிடர் கழக அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன்,மாவட்டச் செயலாளர் மு கோபாலகிருஷ்ணன்,பகுத்தறிவையாளர்கழகம் மாநில அமைப்பாளர் தங்கசிவ மூர்த்தி,கர்நாடக மாநில பொதுக்குழு உறுப்பி னர் ஆசிரியர் இராஜாராம், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் திராவிடர் கழக அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில் நன்றி கூறினார்

