பெரம்பலூரில் அகழ் அரங்கம் துவக்க விழா

பெரம்பலூர்

 

செய்தியாளர் : கேப்டன் வசந்த்… 

 

பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் அகழ் குழுமத்திற்கு சொந்தமான அகழ் அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூரின் வரலாற்று ஆசிரியர் ஜெயபால் ரத்தினம், கவிஞர் சாரங்கபாணி, கவிஞர் ராமர், மொழிபெயர்ப்பாளர் மூர்த்தி, எழுத்தாளர் மோகன். இ. தாகிர் பாட்ஷா, பேச்சாளர் காருண்யா, தலைமை ஆசிரியர் மலர்கொடி, இலக்கிய ஆர்வலர் சுரேஷ்குமார், அகழ் பொறுப்பாளர் ஸ்ரீகாந்த், திவ்யா மற்றும் தலைமை ஆலோசகர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மேலும் ரோஸ் கார்டன் பகுதியின் மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

சிறப்பு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. உடன் மே தின சிறப்பு பட்டிமன்றமாக இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தடம் மாறுகிறார்கள், தடம் பதிக்கிறார்கள் என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதற்கு நடுவராக பேராசிரியர் முத்துமாறன் அவர்கள் விளங்கினார். அவரைத் தொடர்ந்து தடம் பதிக்கிறார்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் மோகன் மற்றும் தாகிர் பாஷா அவர்கள் உரையாற்றினார்கள். தடுமாறுகிறார்கள் என்ற தலைப்பில் பேச்சாளர்கள் காருண்யா மற்றும் வினோதினி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அகழ் நிறுவனத்தின் நிறுவனர் செ. வினோதினி மற்றும் யோ பூபாலன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். மேலும் மக்களின் திரளான பங்கேற்புடன் விழா இனிதே நிறைவு பெற்றது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *