பெரம்பலூரில் திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர், மே 16:

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கராசு தலைமையிலும், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னிலையிலும், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் செந்தூர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் மாணவரணி, விசிக மற்றும் அதன் மாணவரணி, பகுத்தறிவாளர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தொழிலாளர் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *