தாகம் தீர்க்கும் மக்கள் சேவை… செல்லூரில் தவெக நிர்வாகிகளின் சிறப்பான முயற்சி

நாகப்பட்டினம்

செய்தியாளர் ; விஜய்

நாகப்பட்டினம், ஜூன் 5:

கோடைகால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் செல்லூர் ஈசிஆர் சாலையில் இரண்டாவது நாளாக நீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்கவும், கழகப் பொதுச் செயலாளரின் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட செயலாளர் மா. சுகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ். ரூபன் தலைமையில் இந்த மக்கள் நலப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீர், மோர் பந்தல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடும் வெயிலில் செல்லும் பொதுமக்கள் தங்களின் தாகத்தை தணித்துக் கொண்டு நிர்வாகிகளின் இந்த மனிதநேய சேவையை பாராட்டினர்.

கோடைகாலம் முழுவதும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இதுபோன்ற மக்கள் சேவை பணிகள் தொடர்ந்து நடைபெறும் என கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

<b> Total Views: 107 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *