
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்று நிலப் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்ந்த அனைத்து திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கும் அவர் தலைமை வகித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோ. அரங்கநாதன், நாகப்பட்டினம் வட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே. ஸ்ருதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
<b> Total Views: 56 </b>

