தந்தையர் தின விழா கோலாகலம்: பெற்றோர்களுடன் குழந்தைகள் உற்சாக கொண்டாட்டம்

நாகப்பட்டினம்

 

செய்தியாளர் : விஜய்

நாகப்பட்டினம் அருகே கருவேலங்கடையில் அமைந்துள்ள தூய மைக்கேல்ஸ் அகாடமி பள்ளி வளாகத்தில் தந்தையர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், பெற்றோர்களுக்காக ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கிரிக்கெட், பந்துகள் சேகரித்தல் மற்றும் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, தந்தையர்களின் பெருமை மற்றும் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்கள் சிறப்பாக கருத்துரைத்தனர். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் தந்தையின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பரிசுகள் வழங்கினர். குழந்தைகளும் தங்களது பெற்றோர்களுடன் இணைந்து பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பேசிய தாளாளர், “பெற்றோர்களே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதிலும் தந்தை குடும்பத்தின் தூண் போன்றவர்” எனக் குறிப்பிட்டு, தந்தையின் சிறப்புகளை குழந்தைகளின் மனதில் விதைக்கும் வகையில் உரையாற்றினார்.

இறுதியாக, தந்தையர் தின விழாவில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *