EGS பிள்ளை கல்லூரியில் ஒலிம்பிக் மற்றும் சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் E.G.S. பிள்ளை கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டின் முக்கியத்துவம், உடல்நலம், ஒழுக்கம் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, இணையவழி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அவற்றை ஒழிப்பதில் இளைஞர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன், போதைப்பொருள் தடுப்பு உதவி எண் 10581, குழந்தைகள் உதவி எண் 1098 மற்றும் பெண்களுக்கான அவசர உதவி எண் 1091 ஆகியவை குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

<b> Total Views: 6 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *