
செய்தியாளர் வசந்த்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) சிறப்பு போலீசார் கைது செய்து, 175.527 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
போலீசார் தெரிவித்ததாவது, சிறுவாச்சூர் அருகே சரவணன் வயல், பெரியசாமி கோவில் பகுதியில் நேற்று (ஜூலை 25) மதியம் சுமார் 1.30 மணியளவில் ANTF சிறப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருதடி பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (25) என்பவர் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
சோதனையில், Hans 530 கட்டுகள் (159 கிலோ), Coolip 82 கட்டுகள் (7.084 கிலோ), Vimal 145 கட்டுகள் (8.265 கிலோ), VL 139 கட்டுகள் (1.178 கிலோ) என மொத்தம் 175.527 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் TN 11 T 9318 பதிவு எண் கொண்ட வெள்ளை நிற TATA Indica கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது, இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

