உதயநிதி ஸ்டாலின் கைது: துறையூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் 

துறையூர்

 

செய்தியாளர் : அருண் 90959 25936

துறையூர்,

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சி மாவட்டம் துறையூரில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 

அதன் ஒரு பகுதியாக, துறையூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே திரண்ட தி.மு.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு, உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் நகரசேர்மேன் செல்வராணி, சரண்ய மோகன்தாஸ்,மாவட்ட பிரதிநிதி கார்திகேயன், கவுன்சிலர் கார்திகேயன்,கஸ்டமஸ் மாகாலிங்கம், முன்னால்ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகம், கனேசன், மற்றும் 100-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்து அழைத்துச் சென்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

<b> Total Views: 133 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *