
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிதிச் செயலாளர் மறைந்த பாண்டியரசனின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், பெரம்பலூரில் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, பாண்டியரசனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

இதில் மாநிலச் செயலாளர்கள் வீர செங்கோலன், வழக்கறிஞர் ஸ்டாலின், மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
