நிருபர் : சுபாஷ் செல்வம்
அரியலூர்: பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,யின் 58-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் தெற்கு ஒன்றிய பாமக சார்பில் வி.கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் 300 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு அரியலூர் தெற்கு ஒன்றிய நிர்வாகி தங்க செம்மலை தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவிந்தன், வேல்முருகன், தொழிற்சங்கத் தலைவர் தங்க கரிகாலன், நகரச் செயலாளர் விஜி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ., சாமிதுரை, மாவட்ட துணைத் தலைவர் வெற்றிச்செல்வன், ஒன்றிய நிர்வாகிகள் சங்கர் குரு,நல்லதம்பி, செல்வ முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் மணிமாறன் (அரியலூர் தெற்கு ஒன்றியம்) அரியலூர் நகர தலைவர் இராம.காமராஜ், உசேனாபாத் மதியழகன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
