அரசு அலுவலகங்கள், கல்லூரி களில் தொடர்ந்து தூய்மைப் பணி அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்

அரியலூர்

நிருபர் : சுபாஷ் செல்வம்

அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் ந.மிருணா ளினி தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுடன் இணைந்து குப்பைகள், முட்செடிகள், நெகிழிக் கழிவுகளை அகற்றினார்.
அப்போது, அரசு அலுவலக ங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற் கொள்ளப்படும். தூய்மையை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, மாவட்ட நிர்வாகத் தின் தூய்மைப் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, திட்ட இயக்குநர் சங்கமித்திரை, வருவாய் கோட்டாட்சியர் பிரேமி ,வட்டாட்சியர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந. லெனின் , என்எஸ்எஸ்
திட்ட அலுவலர் பேராசிரியர் முனைவர் வி விஜயலட்சுமி (3வது அலகு) , மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *