
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழைவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சாந்தா (42). இவரது கணவர் சக்திவேல் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விவசாய நிலத்தில் பயன்படுத்த வைத்திருந்த பூச்சிமருந்தை சாந்தா குடித்துள்ளார். பின்னர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சாந்தாவின் மகன் ஜெயகீர்த்தன் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
<b> Total Views: 6 </b>

