
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் இன்று காலை 7மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையான கண்காணிப்புக் குழு 7 ரம்யா – சி எஸ் ஆர் தலைமையிலான குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
பரவாயிலிருந்து தொண்டமாந்துறை நோக்கி சென்ற ford கார் வாகனத்தில் தொண்டமாந்துறையைச் சேர்ந்த அசோக் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் /வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

