திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு

திருச்சி

 

தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நத்தமாடிப்பட்டி கிராமமக்கள் போராட்டம்.

 

 

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி மற்றும் கீழக்குறிச்சி கிராமங்களில், நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கையகப்படுத்தப்படும் நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் என்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என நத்தமாடி கிராம விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி – பொன்மலை சாலை மூடப்பட வாய்ப்புள்ளது. இது மாநகருக்கான முக்கிய இணைப்புச் சாலையாக இருப்பதால், மக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.

 

பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்கப்படாமல், நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என வலியுறுத்துகின்றனர்.

 

இன்னும் சுமார் 12.5 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரையிலான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக நீர்நிலைகள் மற்றும் சில தனியார் நிலங்களை எடுக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

 

இந்நிலையில், திருச்சி நீதிமன்றம் அடுத்து உள்ள தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறையின் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் ஐயா கண்ணு தலைமையில் நத்தமாடிப்பட்டி கிராமமக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

 

அவர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவகின்றனர்.

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *