அரியலூர் – குணமங்கலத்தில் சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

அரியலூர்

விக்கிரமங்கலம், மார்ச் 31 –

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோத மது விற்பனை சம்பவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மது விற்பனை நடைபெறுகிறது என்ற ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து குணமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜம் (53) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, வீட்டின் பின்புறத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, ராஜம் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *