அரியலூர் அருகே பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

அரியலூர்

அரியலூர் அருகே உள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம் அரசு உதவிபெறும் கே.ஆர்.வி. நடுநிலைப் பள்ளியில், திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு பள்ளியின் செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.

திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மேலாளர் டாக்டர் கணபதி சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் தனபால், விழி பரிசோதகர்கள் சத்தியபாமா மற்றும் நிஷாந்தினி ஆகியோர் கலந்து கொண்டு, சுமார் 200 மாணவ மாணவியர்களுக்கு கண் பரிசோதனை செய்து, பார்வை குறைபாடுகளை கண்டறிந்து தேவையான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கினர்.

மேலும், கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *