அரியலூர்-குணமங்கலத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: கடைக்காரர் கைது

அரியலூர்

 

விக்கிரமங்கலம், மார்ச் 31:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில், அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் குணமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது குணமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவரது பெட்டிக்கடையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *