
அரியலூர், ஏப். 1:
அரியலூர் நகராட்சிக்குட்பட்ட வ.உ.சி. தெருவில், அதிமுக சார்பில் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தாமரை எஸ். இராஜேந்திரன், பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்வில், அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், முன்னாள் அரசு தலைமை கொறடாவாகவும் உள்ள அவர், வீட்டுக்கு வீடு சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்று, அவரின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ஆ. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ப. இளவழகன், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட அவைத் தலைவர் இராமஜெயலிங்கம், மாவட்ட இணை செயலாளர் பவானி, மா.து. செயலாளர் தங்க. பிச்சமுத்து, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட மற்றும் ஒன்றிய மட்ட நிர்வாகிகள், மகளிர் அணி, தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், மற்றும் கூட்டணி கட்சியான பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று, தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

