அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் க.வைத்திலிங்கம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மனோகரனிடம் அவர் வேட்பு மனுவை வழங்கினார்.
இந்நிகழ்வில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளான மாவட்ட அதிமுக அவைத்தலைவர் ஜே.கே.என். இராமஜெயலிங்கம், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மருத்துவர் பரமேஸ்வரி, அதிமுக மாவட்ட துணை செயலாளர் தங்க. பிச்சமுத்து, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் அறிவு (எ) சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

