
அரியலூர் அருகே கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளை சார்பில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகையில், விழாவிற்கு திரளாக வந்திருந்த பக்தர்களுக்கு சுமார் 2,000 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு, அரியலூர் மாவட்ட தலைவர் செ. ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஆ. சண்முகம், மாவட்ட துணைத் தலைவர் மு. சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் மு. அசோக்குமார், மேனாள் தலைவர் அ. நல்லப்பன், துணைப் புரவலர் சகானா து. காமராஜ், நியமன துணைத் தலைவர் வழக்கறிஞர் க. செல்வராஜ், ஆயுள் உறுப்பினர்கள் நமச்சிவாயம், சடையப்பன், இராஜேந்திரன், ஈஸ்வரன் உள்ளிட்ட ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உதவினர்.நிகழ்வின் நிறைவாக, வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்டது.

