
பெரம்பலூர்:
குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சிவசங்கர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் அப்போது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் காரணமாக, மக்களிடையே பெரும் ஆதரவு அலை உருவாகி வருகிறது என்று போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகிறது.
மேலும், பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, மாணவர்களுக்கு கல்வி சார்ந்த திட்டங்கள், மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்திட்டங்கள் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நலத்திட்டங்களின் விளைவாக, மக்கள் மத்தியில் தற்போதைய அரசுக்கு மிகுந்த ஆதரவு உருவாகி உள்ளது. இது வரவிருக்கும் காலத்திலும் தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதோடு, அரசு தொடர்ந்து மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் இந்த நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
செய்தியாளர் சுபாஷ் செல்வம்

