அருங்கால் கிராமத்தில் திமுக வேட்பாளர் லதா பாலு தீவிர வாக்கு சேகரிப்பு

அரியலூர்

அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலு, அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருங்கால் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தோழமைக் கட்சியினருடன் இணைந்து வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்த அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் வேட்பாளர் லதா பாலுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட திமுக துணைசெயலாளர் அருங்கால் சி.சந்திரசேகரன், ஒன்றிய திமுகசெயலாளர் மா. அன்பழகன், மதிமுக மாவட்டச் செயலாளர் க. இராமநாதன் தேமுதிக மாவட்ட செயலாளர் இராம ஜெயவேல், விசிக அரியலூர் தொகுதி செயலாளர் அங்கனூர் சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன்,திமுகநிர்வாகிகள் பனங்கூர் ஜெயராமன், பனங்கூர் காமராஜ்,கல்யாணசுந்தரம்,பிரஸ்கரிகாலன்,பொய்யூர் இளங்கோவன், விஜிஎம் விஜயகுமார்,அன்பு விஜய பார்த்திபன்,விசிக நிர்வாகிகள் மதி (எ) மருதவாணன், சி.சுதாகர்,மேல கருப்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபி,காங்கிரஸ் நிர்வாகிகள் சுண்ட குடி தியாகராஜன்,டி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *