
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் (மே) ஒன்றியம் குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில்,அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாமரை எஸ் இராஜேந்திரன் கரும்பு வெட்டும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடன் விவசாயப் பணி செய்து , பின்னர் விவசாயிகளிடம் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் .இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ப. இளவழகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேட்டு ராஜேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் வடிவேல் முருகன், ஒன்றிய அதிமுக செயலாளர் சி. சாமிநாதன், மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் பாவேந்தன் மற்றும் தோழமைக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

